
புதுச்சேரி பாரம்பரிய திருவிழா 2019
– ஜனவரி 27 முதல் பிப்ரவரி 11 வரை
செய்தி வெளியீடு
புதுச்சேரியில் பாரம்பரிய திருவிழா தொடர்ந்து 5 ஆண்டாக புதுவையின் சிறப்புகளையும் பெருமைகளையும் கொண்டாடி வருகிறது. தொடக்கத்தில் இது புதுவையின் தனித்துவமிக்க கட்டிட கலையை பாதுகாக்கும் நோக்கில் உருவானாலும் பின்னர் புதுவையில் பல்வேறு சிறப்புகளையும் கொண்டாடும் விதமாக வளர்ந்துள்ளது
ஆன்மீகம் கலை வரலாறு கடற்கரை மற்றும் இயற்கை சூழல் இத்துடன் கூடிய உள்நாட்டு கலாச்சாரத்துடன் தழுவிய பன்னாட்டு பழக்கங்கள் போன்ற பல சிறப்புகள் புதுவைக்கு உண்டு.
இந்த ஆண்டின் விழா புதுவை கடற்கரை மற்றும் ஏரி குளங்கள் வாய்க்கால்கள் போன்ற நீர் நிலைகளில் சீரமைப்பு செய்யப்பட்டதை முன்னிலைப்படுத்தும் வண்ணமாக உள்ளது. வழக்கம் போல இந்த விழா குழந்தைகளுக்கும் கலைஞர்களுக்கும் இளையோர் பெரியோர் என அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது. புகைப்பட கண்காட்சிகள் வினாடி வினா மற்றும் பல கலைகளை ஊக்குவிக்கும் போட்டிகள் மற்றும் நமது தெருக்களில் நாம் நண்பர்களுடன் கூடி விளையாடி மகிழ்ந்த தருணங்களை நினைவூட்டும் வண்ணம் வீதிகளை மீட்டெடுப்போம் நிகழ்வு மேலும் புதுவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்காட்சி மற்றும் வழக்கம்போல் இசை நடனம் புத்தக வெளியீடு போன்ற பல சிறப்பான நிகழ்வுகளை கொண்டுள்ளது.
இவ்வண்ணம் பாரம்பரியங்களை கொண்டாடுவதன் மூலம் புதுவையின் தனித்துவத்தையும் பெருமைகளையும் நிலைநாட்ட முடியும் என விழா குழுவினர் நம்புகின்றனர்
மேலும் விழா பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணையதள முகவரிகளை பயன்படுத்தவும்
https://www.pondicherryheritagefestival.orghttps://www.facebook.com/PHF2019